மன்றப்பதிவு

உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றம் தொடங்கிய காலந்தொட்டு 2016 வரை 52 ஆண்டுகளில் திட்டப்படி 26 மாநாடுகள் நடந்திருக்க வேண்டியதற்குப் பதிலாக கீழ்க்காணும் காரணங்களால் 9 மாநாடுகள் மட்டுமே நடைபெற்றன.

  1. இந்த மன்றம் தொடங்கி 52 ஆண்டுகளாகியும் எங்கும் பதிவு செய்யப் படவில்லை.
  2. இந்த மன்றத்திற் கென்று நிதி இல்லை. .
  3. இந்த மன்றத்திற்கு வங்கிக் கணக்கில்லை..
  4. நிதி இல்லாமையால் இதுவரை நடைபெற்ற ஒவ்வொரு மாநாடும் ஏதோ ஒரு நாட்டு அரசையோ அல்லது பல்கலைக் கழகத்தையோ நம்பிதான் நடத்த வேண்டி இருந்தது..
  5. இந்த மன்றத்திற்கு நியமிக்கப்பட்ட செயற்குழு உறுப்பிர்களைத் தவிர வேறு உறுப்பினர்கள் இல்லை..
  6. மன்றத்திற்கென நிதி இல்லாமையால் மேலே குறிப்பிட்ட மன்றத்தின் நோக்கங்கள் எதையும் செயற்படுத்த இயலவில்லை..
  7. தஞ்சாவூரில் நடைபெற்ற. எட்டாவது மாநாட்டில் வெளியிட்ட 1000 மலர்களில் அன்பளிப்பாக வழங்கிய 130 மலர்கள் போக, நூலகங்களுக்கு வழங்கிய 870 மலர்களுக்கான தொகையாகிய ரூ.12.18 இலட்சத்தை வாங்கிக்கொள்ள மன்றத்திற்கு வங்கிக் கணக்கில்லை. எனவே அந்தப் பணம் தமிழக அரசின் உலகத் தமிழ் நிறுவனத்திடம் (International Institute of Tamil Studies) ஒப்படைக்கப் பட்டுள்ளது.

2. அடுத்தகட்ட நடவடிக்கை

  1. மேற்கண்ட நிலைமைப் பற்றி 2015-ஆண்டு மே மாதம் 20-ஆம் நாள் நடைபெற்ற இம்மன்றத்தின் செயற்குழுக்கூட்டத்தில் கலந்தாய்வு செய்யப்பட்டது. அப்பொழுது இம்மன்றத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற முடிவு எடுக்கப்பட்டு அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட்டது. Society Act–இன் கீழ் பதிவு செய்தால் மன்றத்தில் வெளிநாட்டு உறுப்பினர்கள், இப்போதைய Society விதிப்படி, சேர முடியாது என்ற நிலை இருப்பதால் Company Act-இன் கீழ் Not for Profit Company யாக பதிவு செய்ய முடிவு செய்து முயன்றபோது Company விதிப்படி மன்றதின் பெயரில் International என்னும் சொல் இருக்கக்கூடாது. என்றனர். எனவே International என்னும் சொல்லிற்குப் பதிலாக World என்னும் சொல்லைப் பயன்படுத்தி World Tamil Research Association (WTRA) என்ற பெயரில் இந்த மன்றம் பதிவு செய்யப்பட்டது.. குழுமத்தின் CIN எண் U80300TN2016NPL110744. World Tamil Research Association-இன் பதிவாணை, விதிமுறைகள் ஆகியவை, இணைப்பு 3 & இணைப்பு 4 –இல் கொடுக்கப்பட்டுள்ளன.
  2. உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் வரவு-செலவு தொடர்பாக வருமான வரி செலுத்துவதற்கும், உலகத்தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் (WTRA) பெயரில் வங்கிக் கணக்குத் தொடங்குவதற்கும் PAN எண் தேவை எனபதால் PAN எண்ணிற்கு விண்ணப்பித்து மன்றத்திற்கு AABCW8291P என்ற PAN எண் பெறப்பட்டது (இணைப்பு – 5).
  3. இவற்றைத் தொடர்ந்து தனிநபர் உறுப்பினர்கள், நிறுவன உறுப்பினர்கள், தேசியக்கிளைகள் சேரத் தொடங்கியுள்ளனர்.